தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பள்ளிகள் திறப்பா... மூடலா...

1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நவம்பர் மாதம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஆங்காங்கே மூடப்பட்டுவருகின்றன.

பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறப்பு

By

Published : Sep 16, 2021, 2:47 PM IST

Updated : Sep 21, 2021, 9:13 PM IST

சென்னை:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செப்.14ஆம் தேதி செய்தியாளர்களிடம் "தமிழ்நாடு முழுவதும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை அடுத்த கட்டமாக பள்ளிகளைத் திறக்கலாம் என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான அறிக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலிடம் சமர்பிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார்.

அத்துடன் அவர், பள்ளிகள் திறக்கப்பட்டால் சுழற்சி முறையில் மட்டுமே திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அந்த வகையில், இன்று(செப்.16) அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகிஉள்ளது. ஏற்கனவே பள்ளி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், 8ஆம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்படுவது மாணவர்கள், பெற்றோர்களிடையே சற்று தயக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்கள் பல்வேறு பள்ளிகள் கரோனா காரணமாக மூடப்பட்டுவருகின்றன.

இதையும் படிங்க:1 முதல் 8ஆம் வகுப்புகள் திறப்பு: அறிக்கையை சமர்பித்தார் அன்பில் மகேஷ்!

Last Updated : Sep 21, 2021, 9:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details