தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பள்ளிகளை கண்காணிக்க 37 அலுவலர்கள் நியமனம்

பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு 37 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

school reopen monitoring officers
school reopen monitoring officers

By

Published : Aug 31, 2021, 6:59 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நாளை (செப். 1) 9 வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நேரடியாக தொடங்கப்படுகின்றன.

இதனையொட்டி தேவையான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. பள்ளிகளை திறப்பதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், 37 மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதில், பள்ளிக் கல்வித்துறையை சார்ந்த 4 ஐஏஎஸ் அலுவலர்கள் உள்ளிட்ட 37 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அரசின் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு மாவட்டந்தோறும் பள்ளிகள் திறக்கப்படுகின்றதா, மாணவர்களின் வருகை எந்த அளவிற்கு உள்ளது உள்ளிட்ட அம்சங்களை அலுவலர்கள் கண்காணிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details