சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்.1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன.
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உருமாற்றமடைந்த ஏஒய்.4.2(AY.4.2) வகை கரோனா வைரஸ் பரவிவருகிறது. இதைத்தொடர்ந்து, இந்த வைரஸ் மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களிலும் பரவியுள்ளது.
கடந்த ஒரே வாரத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த வகை கரோனா பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏஒய்.4.2 வைரஸ், கரோனாவைவிட 6 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவது பெற்றோரிடையே சற்று தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 8இல் பள்ளிகள் திறப்பு!