சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இன்று பேசிய திமுக உறுப்பினர் ஈஸ்வரப்பன், தனியார் பள்ளியின் தரம் அரசு பள்ளிகளில் கிடைப்பதில்லை எனவும், மாணவர்கள் பாடத்தை உள்வாங்கி கற்கும் சூழல் அரசு பள்ளிகளில் குறைந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அனைத்து மாணவர்களையும் கல்வி கற்க வைக்க அரசு சார்பில் புத்தகங்கள், பை, சீருடை என 14 பொருட்கள் இலவசமாக கொடுக்கப்பட்டுவருகின்றன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளியின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதால், அரசு பள்ளி மாணவர்கள் மத்திய அரசின் நீட் தேர்வு முதற்கொண்டு அனைத்துத் தேர்வுகளையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.