தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை - காரணம் இதுதானாம்! - தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் புனிதவெள்ளியை ஒட்டி, பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

விடுமுறை
விடுமுறை

By

Published : Apr 11, 2022, 7:40 PM IST

சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்வி ஆணையர் வரும் சனிக்கிழமை (ஏப்.16) பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், '2021-22ஆம் கல்வி ஆண்டில் 14.04.2022 வியாழக்கிழமையன்று தமிழ்ப்புத்தாண்டு மற்றும் 15.04.2022 வெள்ளிக்கிழமையன்று புனித வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் தொடர் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், 16.4.2022 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. விடுமுறை முடிவுபெற்று 18.04.2022 அன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற தும்பா ஊர்வலம்!

ABOUT THE AUTHOR

...view details