தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பரவல்... பள்ளிகளுக்கு விடுமுறை... - school holiday due corona

தமிழ்நாட்டில் மாணவர்களிடையே கரோனா பரவிவருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

school students
school students

By

Published : Oct 6, 2021, 6:34 PM IST

Updated : Oct 6, 2021, 10:53 PM IST

சென்னை: நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் செப். 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும், திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது.

அந்த வகையில் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் மாணவர்களிடையே கரோனா தொற்று பரவியதால் 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதோபோல சில கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இதனிடையே நவம்பர் மாதம் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

இதையும் படிங்க:பள்ளிகளுக்கு விடுமுறை

Last Updated : Oct 6, 2021, 10:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details