சென்னை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி முன்மொழிவை சமர்ப்பித்துள்ளார்.
முனைவர் பட்டத்திற்கு தயாராகும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி முன்மொழிவை சமர்ப்பித்துள்ளார்.
பள்ளி குழந்தைகளின் உடல் திறன் செயல்பாட்டை எந்திர கற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டறிதல் என்னும் தலைப்பில் திருச்சி தேசிய கல்லூரியில் உள்ள உடற்கல்வி துறையில் தன்னுடைய முனைவர் பட்டத்திற்கான முன்மொழிவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமர்ப்பித்துள்ளார்.
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சமூக வலைதளங்கள் மூலமாகவும், தான் பங்கேற்கும் நிகழ்வுகளிலும் உடற்பயிற்சியின் அவசியத்தை எடுத்துரைப்பதை வழக்கமாக கொண்டவர் அன்பில் மகேஷ். சமீபத்தில் இவர் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தது.