தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஏடிஎம் கொள்ளை: 30 வங்கிக் கணக்குகள் முடக்கம்

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்குத் தொடர்பாக 30 வங்கிக் கணக்குகளை சென்னை காவல் துறையினர் இன்று(ஜூலை.5) முடக்கியுள்ளனர்.

sbi atm robbery case
sbi atm robbery case

By

Published : Jul 5, 2021, 4:35 PM IST

Updated : Jul 5, 2021, 5:33 PM IST

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் ஜூன் 15,16,17,18 ஆகிய தேதிகளில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் ரூ. 55 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஹரியானாவைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, ஹரியானா விரைந்த தனிப்படை காவல் துறையினர், சிசிடிவி அடையாளங்களின் அடிப்படையில், அமிர் அர்ஷ், வீரேந்தர் ராவத், நதீம் ஹுசைன் மற்றும் கூட்டத் தலைவன் சவுகத் அலி ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர்.

கொள்ளையர்களைத் தேடும் பணியில் தீவிரம் காட்டும் போலீஸ்

மீதமுள்ளவர்கள் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர். அதற்காக ஹரியானாவில் தனிப்படை காவல் துறையினர் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கொள்ளையடிக்கப் பயன்படுத்தப்பட்ட 30 வங்கிக் கணக்குகளை சென்னை காவல் துறையினர் முடக்கியுள்ளனர்.

மேலும், இந்த கொள்ளைக் கும்பல் மகாராஷ்டிரா, ஹரியானா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பதால், அந்தந்த மாநில காவல் துறையினர் சென்னை காவல் துறையினரை உதவிக்கு அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஏடிஎம் கொள்ளை வழக்கு: நசீம் உசேனுக்கு 4 நாள் காவல்

Last Updated : Jul 5, 2021, 5:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details