இது தொடர்பாக, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ”1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சேர்த்தே தேர்தல் நடத்தப்பட்டன என்பதால், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் தனித்தனியாக நடத்தப்படுவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.
ஊராட்சிமன்றத் தலைவர், உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை என்றபோதிலும், ஒன்றியப் பஞ்சாயத்து உறுப்பினர், மாவட்டப் பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட அரசியல் கட்சிகளுக்கு அனுமதி உள்ளதால், வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.