தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிய நான்..! - சசிகலா - சென்னை செய்திகள்

சசிகலா இன்று நவ.05ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா
சசிகலா

By

Published : Nov 5, 2021, 11:08 PM IST

Updated : Nov 6, 2021, 7:14 AM IST

சென்னையில் சசிகலா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தன்னை அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏன் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

அதில், அவர் கூறியிருப்பதாவது, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்த பேரியக்கம் நம் புரட்சித்தலைவராலும், புரட்சித்தலைவியாலும் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு இயக்கம் ஆகும். ஏழை எளியவர்களின் வாழ்வு வளம் பெற உருவாக்கப்பட்ட இயக்கம். அப்படிப் பட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் வழி வந்த என் உயிர் தொண்டர்களுக்கும், என்னை நேசிக்கும் அத்துணை நல் உள்ளங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிய நான்

என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், என்னிடம் மலர்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவதை தயவு செய்து தவிர்க்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒப்பற்ற அன்புமட்டும் போதும்

அவ்வாறு ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால், தாங்கள் வாழும் இடத்திற்கு அருகில் உள்ள ஏழை எளியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், தற்போது கரோனா என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரத்தை இழந்து விட்டவர்களுக்கும், மேலும், மழை வெள்ளத்தால் பாதிகப்பட்டவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே, அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் அனைவரது ஒற்றுமையும், ஒப்பற்ற அன்பு மட்டுமே எனக்கு வேண்டும்.

உங்களையெல்லாம், தாங்கள் வாழும் இடத்திற்கே நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன். விரைவில் சந்திப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நீட் தேர்வில் பழங்குடியின மாணவன் வெற்றி!

Last Updated : Nov 6, 2021, 7:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details