நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து 2014ஆம் ஆண்டு இரண்டு கோடி ரூபாய் கடனாகப் பெற்றிருந்தனர்.
சரத்குமார், ராதிகாவுக்குச் சிறை தண்டனை - சரத்குமார் சிறை தண்டனை
12:16 April 07
சென்னை: ஏழு காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமாருக்கு தலா ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதற்காக சரத்குமார், ராதிகா சரத்குமார் சார்பில் அளிக்கப்பட்ட ஏழு காசோலைகளுக்கு வங்கிக் கணக்கில் பணம் இல்லை எனத் திரும்பி வந்துவிட்டதால் ராடியன்ஸ் நிறுவனம் செக் மோசடி வழக்குத் தொடர்ந்தது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பார்த்திபன், நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா, பங்குதாரர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மொத்தம் ஏழு வழக்குகளில் சரத்குமார் மீதான ஐந்து வழக்குகளில் தலா ஓராண்டும், மீதமுள்ள இரண்டு வழக்குகளில் சரத்குமார் ,ராதிகா, பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு தலா ஓராண்டும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.