சென்னை: சமத்துவ மக்கள் கட்சியின் பொருளாளர் ஏ.என். சுந்தரேசன் தாக்கல்செய்துள்ள மனுவில், இது கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரால் தொடங்கப்பட்ட கட்சி, இதுவரை அனைத்துத் தேர்தல்களிலும் களம்கண்டு வருவதாகவும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 50 தொகுதிகளில் போட்டியிடுவதால் தங்களுக்குப் பொதுச்சின்னம் ஒதுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 1இல் மனு கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
பதிவுசெய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு இரண்டு பொதுத்தேர்தல்களில் பொதுச்சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையத்தில் 2015ஆம் ஆண்டு விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளதன் அடிப்படையில் பொதுச் சின்ன கோரிக்கை வைத்தும், இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை என மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.