தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செக் பவுன்ஸ்: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியின் உறவினருக்கு சிறை

காசோலை மோசடி வழக்கில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மருமகனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 4, 2022, 9:15 AM IST

செக் பவுன்ஸ்:முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியின் உறவினருக்கு சிறை

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் தனக்கு சொந்தமாக சுமங்கலி என்னும் பெயரில் நகைக்கடை 2003ஆம் ஆண்டு வரை நடத்தி வந்தார். அதன்பின் கடையை மூடி விட்டு வேறு தொழில்களில் ஈடுபட்டார். இந்த நிலையில் ரவீந்திரனிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.எல்.லட்சுமணனின் மருமகன் ஏ.எல் குமார் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் ரூ.1 கோடி 20 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்காக 6 காசோலைகள் மற்றும் ஆறு கடன் உத்தரவாத பத்திரம் வழங்கி உள்ளார். பின்னர், அவருடைய வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலைகள் அனைத்தும் திரும்பி வந்தன.

ஏ.எல்.குமாருக்கு எதிராக காசோலை மோசடி வழக்கை ரவீந்திரன் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மூன்றாவது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கடனுக்காக அவர் கொடுத்த காசோலை பணம் இல்லாமல் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரும்பி உள்ளதாகவும், வேண்டும் என்றே ஏமாற்ற வேண்டும் என்ற உள் நோக்கில் செயல்பட்டுள்ளார். எனவே, எனது தொகையை திரும்ப தர உத்தரவிட வேண்டும் மோசடிக்கு என உரிய தண்டனை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சைதாப்பேட்டையில் உள்ள பெருநகர குற்றவியல் மற்றும் மூன்றாவது விரைவு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் முன் நேற்று (அக்.3) விசாரணை வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, காசோலை மோசடி வழக்கில் ஏ.எல்.குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே அவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும், அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பில் தெரிவித்துள்ளார். மேலும், கடன் தொகை 1 கோடியே 20 லட்சம் ரூபாயை 2 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் தண்டனை எதிர்த்து குமார் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்து மனு தாக்கல் செய்ததை அடுத்து சிறை தண்டனை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அலட்சியம் வேண்டாம்; நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் - திமுகவினருக்கு ஸ்டாலின் மடல்

ABOUT THE AUTHOR

...view details