தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கைப்பைக்குள் கட்டுக்கட்டாக ரூ.55.76 லட்சம் அமெரிக்க கரன்சி - சுங்கத்துறை பறிமுதல்

சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.55.76 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலா் கரன்சிகளை சுங்கத்துறை அலுவலர்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்து தொடர்புடைய மூன்று பேரை விசாரித்து வருகின்றனர்.

சுங்கத்துறை
சுங்கத்துறை

By

Published : Mar 7, 2022, 10:33 PM IST

சென்னை:இலங்கைக்கு சென்னையிலிருந்து செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பெருமளவு கணக்கில் இல்லாத வெளிநாட்டுப் பணம் கடத்தப்படுவதாகச் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

கைப்பைக்குள் ரகசியம்

இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள், அந்த விமானத்தில் பயணிகளைத் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 3 பயணிகள் ஒரு குழுவாக இந்த விமானத்தில் இலங்கை செல்ல வந்திருந்தனர். அவர்களை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களுடைய கைப்பைகளைச் சோதித்ததில், அந்த கைப்பைகளுக்குள் ரகசியமாக கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

கட்டுக்கட்டாக கரன்சி நோட்டு

3 பயணிகளின் கைப்பைகளிலிருந்தும் மொத்தம் ரூ. 55.76 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் கரன்சிகள் இருந்தன. இதையடுத்து சுங்க அலுவலர்கள் 3 பேரின் பயணங்களையும் ரத்து செய்தனர். அதோடு அவர்களிடம் இருந்த கணக்கில் இல்லாத கள்ளப்பணம் ரூ.55.76 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 3 பேரையும் கைது செய்து சுங்க அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

விசாரணை தீவிரம்

தொடர்ந்து விசாரணையில் மூவரும், பணத்தை வேறு யாருக்காகவோ இலங்கைக்குக் கடத்தி செல்வதாகவும், இலங்கையிலிருந்து, துபாய் போன்ற நாடுகளுக்கு கடத்த இருந்ததாகவும் தெரிய வந்தது. எனவே, அந்தப் பணத்தை அவர்களிடம் கொடுத்து அனுப்பிய ஆசாமி யார்? என்று தொடர்ந்து சுங்க அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Share Market: 14 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டிய கச்சா எண்ணெய் விலை

ABOUT THE AUTHOR

...view details