தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கேட்பாரற்று விமானக் கழிவறையில் ரூ. 1.41 லட்சம் மதிப்பிலான தங்கம்! - பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.1 கோடி, 41 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றினர்.

3 கிலோ 222 கிராம் தங்கத்தை அலுவலர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த

By

Published : Oct 30, 2021, 7:27 AM IST

சென்னை:பன்னாட்டு விமான நிலையத்திற்குத் துபாயில் இருந்து விமானம் வந்தது. பின்னர், ஊழியர்கள் விமான கழிவறையில் சென்று பார்த்த போது ஒரு பார்சல் இருந்தது. உடனே அந்த பார்சலை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

தங்கத் துண்டுகள்

அலுவலர்கள் பிரித்துப் பார்த்த போது, 12 தங்கத் துண்டுகள் இருந்ததுள்ளன. விமானத்தில் வந்த பயணி யாரோ சோதனைக்குப் பயந்து கழிவறையில் போட்டுச் சென்று இருக்கலாம் எனத் தெரியவந்தது. ரூ. 30 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 702 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினார்கள்.

மேலும், கழிவறை பகுதியில் சுங்கத்துறை அலுவலர்கள், தங்கம் மறைத்து வைக்கப்பட்ட கால் சட்டையொன்றைக் கண்டெடுத்தனர். கைப்பற்றப்பட்ட 2 கிலோ 520 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ. 1 கோடி, 11 லட்சம் மதிப்பு என்று கணக்கிடப்பட்டுள்ளது.

விசாரணை தீவிரம்

துபாயில் இருந்து வந்த விமானத்தில் அவைகள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, விமான நிலைய கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ரூ.1 கோடியே 41 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 222 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தீபாவளி அதிரடி ஆபர்.. ரூ.80 குறைந்த 8 கிராம் தங்கம்!

ABOUT THE AUTHOR

...view details