தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு? - ஆர்.எஸ்.பாரதி

சென்னை: நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதால், ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கக் கூடாது என விளக்கமளிக்க திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.

mp
mp

By

Published : May 29, 2020, 12:14 PM IST

பிப்ரவரி மாதம், அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, பட்டியலின சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்தார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால பிணை வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிகள் தங்கள் திறமையால் அல்லாமல் அரசியல் கட்சிகளின் ஆதரவாலேயே அந்தப் பதவிக்கு வருகிறார்கள் என்பதை போல் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு இருந்ததாகவும், இது ஒட்டுமொத்த நீதித்துறையின் மாண்பை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கேட்டு வழக்கறிஞர் ஆண்டனி ராஜ் என்பவர் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் மனு அளித்தார்.

இந்த மனுவை காணொலி மூலமாக இன்று விசாரித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியது தொடர்பாக, ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கக் கூடாது? என்பது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: செக் மோசடி வழக்கு - உயர் நீதிமன்றம் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details