சென்னை:பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்திடுவதில் வணிகவரித் துறை மூலம் பெறப்படும் வரி வருவாயானது பெரும் பங்கு வகிக்கிறது. எனவே அரசுக்கு சேர வேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும் விதத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வணிக வரித்துறை வாகன தணிக்கையில் ரூ. 478.98 லட்சம் அபராதம் வசூல்!
வணிக வரித்துறையின் வாகன தணிக்கையில் ரூ.478.98 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த செப். 20 ஆம் தேதி முதல் அக். 03 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகவரி நுண்ணறிவு பிரிவு அலுவலகங்கள் மூலமாக 26 ஆயிரத்து 739 வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் 37 ஆயிரத்து 199 மின்னணு வழிப்பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு, வழிப்பட்டியல் இல்லாமல் சென்ற 581 வகைகளில் குற்றப்பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூபாய் 478.98 இலட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய தணிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகளுக்கு தாய் பெயரை இனிஷியலாக வைக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை அனுமதி