தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு ரூ. 250 கோடி நிதி ஒதுக்க வேண்டும்' - SAATHI

மாநிலத்தில் சுற்றுலாத் தொழில் புத்துயிர் பெற்று திகழ்வதற்காக, புதுமையான யுக்திகளைக் கையாண்டு தொழில் வளர்வதற்கு 250 கோடி ரூபாய் நிதி உதவியை தமிழ்நாட்டிற்குச் சிறப்பு நிதி மானியமாக ஒதுக்குமாறு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

velamandi nagarajan
velamandi nagarajan

By

Published : Oct 16, 2020, 10:08 PM IST

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை மறு ஆய்வு செய்வதற்கான கூட்டம் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக கலந்துகொண்டார். அப்போது, அரசு கூடுதல் தலைமைச் செயலர் (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை) விக்ரம் கபூர், சுற்றுலா ஆணையர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் த.பொ. ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்தக் கூட்டத்தில், விருந்தோம்பல் தொழிலுக்கான மதிப்பீடு, விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அமைப்பிற்கான தரவுத் தளம் “சாத்தி” (SAATHI) மற்றும் விருந்தோம்பல் தொழில்துறையின் தேசிய ஒருங்கிணைந்த தரவுத்தளம் “நிதி” (NIDHI) பல்வேறு விருந்தோம்பல் சேவைகள் மற்றும் வசதிகளை மின்னணு முறையில் வழங்க வழி செய்கிறது. நிதி என்ற தரவுத் தளத்தில் இதுவரை 1082 அலகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற அனைத்து விடுதிகளையும் பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பயண மற்றும் சுற்றுலா தொழில் அதிக பின்னடைவை அடைந்திருந்த போதும், இதுபோன்ற எதிர்பாரத அதிர்ச்சிகளை உள்வாங்கிக் கொள்ளவும், நிலைத்த மற்றும் பொறுப்புள்ள சுற்றுலாவை முழுவதுமாக தழுவும் வகையில் நிச்சயம் மீளும் என்று நம்பிக்கை தெரிவித்ததார்.

தொடர்ந்து, விருந்தோம்பல் மற்றும் பயணத் துறையில் தேவை மற்றும் நுகர்வோர் செலவினங்களை தூண்டுவதற்காக, விமானம், ரயில் அல்லது சாலை பயணம், தங்குமிடம் மற்றும் உணவு ஆகிய துறைகளில் 50 விழுக்காடு மானியம் வழங்குவதன் மூலம் சுற்றுலா அமைச்சகம் ”நாம் பயணிப்போம்” என்ற புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்ட விடுப்பு பயண சலுகை (LTC) ரொக்க சீட்டு வழங்கும் இத்திட்டம் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையை வெகுவாக பாதிக்கும். அதனால் இந்த திட்டத்தை இந்திய அரசு மறு பரிசீலனை செய்யலாம்.

கோவிட் தொற்று நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். நிதி நெருக்கடி மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் இல்லாத்தால் அனைத்து சுற்றுலா தொழில் முனைவோர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் சுற்றுலாத் தொழில் புத்துயிர் பெற்று திகழ்வதற்காக, புதுமையான உத்திகளை கையாண்டு தொழில் வளர்வதற்கு 250 கோடி ரூபாய் நிதி உதவியை தமிழகத்திற்கு சிறப்பு நிதி மானியமாக ஒதுக்குமாறு மத்திய அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.

அதே போல், கடந்த ஆண்டு பாரத பிரதமரின் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின் தொடர்ச்சியாக மாமல்லபுரத்தை ஐகானிக் சுற்றுலாத்தலமாக மேம்படுத்த ரூ .563.50 கோடிக்கான திட்டம், சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ.99.84 கோடிக்கு இராமாயண சுற்று மேம்பாடு மற்றும் ரூ.99.31 கோடிக்கு அறுபடை வீடு சுற்று மேம்பாடு திட்டங்களுக்கான நிதி ஒப்பளிப்பை விரைவுபடுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாட்டில் அரிய சுற்றுலா காரணிகளை கொண்டுள்ள 'கிராமிய சுற்றுலா', 'சாகச சுற்றுலா', 'கப்பல் சுற்றுலா' மற்றும் 'நீர் விளையாட்டு' போன்ற புதிய சுற்றுலாக்களை இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் நிதி உதவியின் மூலம் முழுமையாக உள்நாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்த முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க :தமிழ்நாட்டிலுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் திடீர் ஆய்வு! நீதிமன்றம் அறிவுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details