தமிழ்நாடு

tamil nadu

தேர்தல் செலவிற்காக ரூ.102.38 கோடி நிதி! - தமிழக அரசு ஒதுக்கீடு!

By

Published : Feb 27, 2021, 1:08 PM IST

சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்காக ரூ.102.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

ops
ops

சட்டப்பேரவையில் 2020-21ம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பேசும்போது, “கரோனா பெருந்தொற்று மற்றும் இதர அவசரத் தேவைகளின் காரணமாக, அரசுக்கணக்கில் ஏற்பட்ட கூடுதல் செலவினங்கள் சார்ந்த இனங்கள் இறுதித்துணை மதிப்பீடுகளில் உள்ளடங்கும்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், வழக்கமாக சில முக்கிய செலவினங்களை குறிப்பிடுவது தற்போது உகந்ததாக இருக்காது. கூடுதல் செலவினங்கள் சார்ந்த விவரங்கள் இறுதி துணை மதிப்பீட்டு புத்தகத்தில் உள்ளன. கூடுதல் செலவினங்களின் அனைத்து இனங்களும், அரசு ஆணைகள் மற்றும் ஒப்புதல்கள் வழங்கப்பட்ட அல்லது செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கான கூடுதல் செலவினங்கள் தான்.

இறுதி துணை மதிப்பீடுகளில் எந்த ஒரு புதிய திட்டத்தின் அறிவிப்போ அரசு செலவினங்களுக்கான புதிய இனங்களோ சேர்க்கப்படவில்லை. சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்காக 102.38 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அந்தத் தொகை மட்டுமே துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. 2021-21ம் ஆண்டிற்கு இறுதி துணை மதிப்பீடுகள் மொத்தம் 21 ஆயிரத்து 172.82 கோடி நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும் வழி வகை செய்கின்றன. இவற்றில் 17 ஆயிரத்து 790.85 கோடி வருவாய் கணக்கிலும்,3 ஆயிரத்து 381.97 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: ’மறுபிறவி எடுத்துள்ளேன்’ - அமைச்சர் காமராஜ் கண்ணீர்!

ABOUT THE AUTHOR

...view details