தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் ரூ.10 கோடி போதைப் பொருள்கள் எரிப்பு - drugs burnt in Chennai

சென்னை விமான நிலையம், கார்கோ பிரிவுகளில் கைப்பற்றப்பட்ட ரூ.9.4 கோடி மதிப்புடைய 47 கிலோ போதைப் பொருள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.

drugs burnt in Chennai
drugs burnt in Chennai

By

Published : Nov 30, 2021, 9:44 PM IST

சென்னை : சென்னை விமான நிலையம், விமான நிலைய கார்கோ பிரிவுகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகளிடமிருந்தும், வெளிநாட்டிற்கு அனுப்ப வந்திருந்த பார்சல்களிலிருந்தும் சென்னை விமானநிலைய சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு துறை, மத்திய போதை தடுப்பு பிரிவு காவலர்கள் ஆகியோர் தனித்தனி வழக்குகளில் 47 கிலோ கெட்டமின் ஹைட்ரோகுலோரைடு என்ற போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனர். அவைகளின் சர்வதேச மதிப்பு ரூ.9.4 கோடி ஆகும்.
இந்தப் போதைப்பொருள்களை லெதர் ஜாக்கெட்களில் மறைத்து வைத்து சென்னை சர்வதேச விமானநிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற சில பயணிகளிடமிருந்தும், மருத்துவ பொருள்கள் என்ற பெயரில் பார்சல்களில் கார்கோ விமானங்களில் கடத்த முயன்றதையும் இவர்கள் பிடித்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் முடிவடைந்ததையடுத்து, போதைப்பொருள்களை அழிக்க சுங்கம், டிஆர்ஐ, மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி செங்கல்பட்டு அருகே உள்ள பயோமெடிக்கல் கழிவுகளை அழிக்கும் தொழிற்சாலைக்கு இன்று (நவ.30) போதைப் பொருள்களை எடுத்து சென்ற அலுவலர்கள், அங்குள்ள ராட்சத தீயில் போதைப்பொருள்களை போட்டு எரித்து சாம்பலாக்கி அழித்தனர்.
இதையும் படிங்க : கப்பலில் உல்லாச போதை விருந்து - ஷாருக்கான் மகன் உள்பட 13 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details