சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கதுறை அதிகாரிகளால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் சட்டவிரோதமான பொருட்கள் உள்ளிட்டவைகள் விமான பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகளை சுங்கத்துறையினர் அழிக்க முடிவு செய்தனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட ரூ 1 கோடி மதிப்பிலான 10 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் செங்கல்பட்டு மறைமலை நகரில் உள்ள போதை பொருள் அழிக்கும் கருவியில் நேற்று (ஜூன்20) சுங்கதுறையினர் முன்னிலையில் அழிக்கப்பட்டது.