சென்னைஆதம்பாக்கம் இபி காலனி பகுதியைச் சேர்ந்தவர் குரான் பாஷா(54). இவர் கூடுவாஞ்சேரி செல்வதற்காக செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்பொழுது குரான் பாஷா ஓடும் மின்சார ரயிலில் ஏற முயன்றபோது, தவறி கீழே இறங்கிவிட்டார். அப்போது அவர் நிலை தடுமாறி ரயிலில் விழும் முன் அதே ரயிலில் சென்று கொண்டிருந்த (ஆர்.பி.எப்)ரயில்வே போலீஸ் அனுஷா, அந்த நபரை நடைமேடை பக்கமாக தள்ளிவிட்டு உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
இதையடுத்து பயணிகள் அவரை மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தற்பொழுது செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில்நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
நிலை தடுமாறிய பயணியைக் காப்பாற்றிய ரயில்வே போலீஸ் - chennai
சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீசாரின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
நிலை தடுமாறிய ரயில் பயணியை காப்பாற்றிய போலீஸ்