சென்னை:சென்னை துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந்தவர் ரவீஸ்வரன்(55). இவர் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு எம்.கே.பி நகரில் குடிபோதை தகராறில் உறவினர் ஒருவரை ரவீஸ்வரன் மற்றும் அவரது தந்தை வேலுச்சாமி இணைந்து கொலை செய்துள்ளனர்.
இவ்வழக்கில், நேற்று(செப்.21) மதியம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ரவீஸ்வரன் மற்றும் தந்தை வேலுச்சாமி ஆஜராகி உள்ளனர்
பின்னர், இருவரும் திருவான்மியூர் செல்லும் மின்சார ரயிலில் ஏறி திரும்பிக்கொண்டிருக்கையில், திடீரென ரயிலுக்குள் புகுந்த 4 மர்ம நபர்கள் ரவீஸ்வரனை கத்தி மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.