73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 448 கோயில்களில் சிறப்பு வழிபாடு, சமபந்தி நிகழ்வு நடத்த வேண்டும் என இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் ஒவ்வொரு பகுதியில் உள்ள கோவில்களிலும் நடந்த சிறப்பு வழிபாடு, சமபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சமபந்தி விருந்தில் உணவு அருந்தும் முதலமைச்சர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்துவிட்டு கே.கே. நகர் வரசக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். அவர்களை எம்.எல்.ஏ ரவி, இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஆகியோர் வரவேற்றனர்.
தமிழிசை சவுந்தர்ராஜன் முதலமைச்சருக்கு ராக்கி கட்டினார் அப்போது அங்குவந்திருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ரக்ஷபந்தனை முன்னிட்டு முதலமைச்சருக்கு ராக்கி கயிறு கட்டி சகோதர பாசத்தை வெளிப்படுத்தினார்.