சென்னை: அமைந்தகரை பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி சிறுமி நேற்று முன்தினம்(அக்-6) மாலை டியூஷன் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர் டியூஷன் நடத்தும் இடத்திற்கு சென்று கேட்டுள்ளனர். அங்கு சிறுமி சகோதரி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாக தெரிவித்த நிலையில், பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திருட்டு, வழிப்பறி வழக்கில் தொடர்புடைய இளைஞர் ஒருவனுடன் சிறுமி சென்றிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்த நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகே சிறுமியை மீட்கப்பட்டார். அந்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.