புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியை அடுத்த சூலமங்கலம் பேருந்து நிலையம் சந்திப்பில் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று முன் தினம் (டிச. 19) அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இச்சிலை மீது சாணம் பூசி உள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், விசிக கட்சியின் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து நெட்டபாக்கம் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்வதாக உறுதியளித்தன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.