தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவர்களுக்குச் சத்துணவுக்கு மாற்றாக அரிசி, பருப்பு வழங்கல் - அரிசி

சென்னை: கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மதிய உணவிற்கு மாற்றாக அரிசி, பருப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

meal
meal

By

Published : Jul 22, 2020, 1:28 PM IST

திரு.வி.க. நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவிற்குப் பதில் இம்மாதத்திற்கான அரிசி, பருப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளியின் தலைமையாசிரியர் ஜான், ”கரோனா பேரிடர் காலத்திலும் மாணவர்களுக்குச் சத்தான உணவு வழங்க வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு உரிய அரிசி, பருப்பு ஆகியவற்றை பெற்றோரிடம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களுக்குச் சத்தான உணவு கிடைப்பது உறுதிசெய்யப்படும் “ என்றார்.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவும் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், பள்ளிகள் இன்னும் திறக்கப்படாததால் மாணவர்களுக்குச் சத்துணவுக்குப் பதில் உலர்ந்த அரிசி, பருப்பு ஆகியவற்றை வழங்க சமூகநலத் துறை உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு சத்துணவுக்கு மாற்றாக அரிசி பருப்பு வழங்கல்

இதையும் படிங்க: ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறை - கோளாறுகளை சரி செய்ய உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details