தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

12 ஆம் வகுப்பு தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு - மறுகூட்டல்

சென்னை: 12ஆம் வகுப்பு மறு கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பம் செய்திருந்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

revaluation
revaluation

By

Published : Sep 7, 2020, 4:12 PM IST

இது குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”11, 12ஆம் வகுப்பில் அரியர் பாடங்களுக்கான தேர்வுகளை மார்ச் 2020 இல் எழுதி, அதில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல், ’www.dge.tn.gov.in’ என்ற இணையதளத்தில் நாளை பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில், எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், உடன் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை இணையதளத்தில் பதிவுசெய்து, தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி குறித்து ஏஐசிடிஇ, யுசிஜி விதிமுறைகள் பின்பற்றப்படும்'

ABOUT THE AUTHOR

...view details