தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அண்ணா நகர் மண்டலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் - Restricted Areas in Anna Nagar Zone

சென்னை: அண்ணா நகர் மண்டலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

Restricted Areas in Anna Nagar Zone
Restricted Areas in Anna Nagar Zone

By

Published : Jul 1, 2020, 5:27 PM IST

சென்னையில் குறிப்பாக ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சென்னை முழுவதும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த வைரஸ் பரவலை தடுக்க மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை முகக்கவசம் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நோய் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்தப் பரவலை கட்டுப்படுத்த தொற்று அதிகம் உள்ள பகுதியை தனிமைப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது. அதுபோல 108 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதி தற்போது 143 ஆக அதிகரித்துள்ளது.

அண்ணாநகர் பகுதியில் பரவல் அதிகமாக உள்ளதால் ஒரே நாளில் 35 தெருக்களை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் அப்பகுதிகளில் பரவலை குறைப்பதற்காக 15 மண்டலங்களிலும் அதிகமாக அறுபத்தாறு மருத்துவ முகாம்கள் நேற்று நடைபெற்றது.

இந்தநிலையில் மண்டல வாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தண்டையார்பேட்டையில் - 50
திருவிக நகரில் - 3
அம்பத்தூர் - 6
அண்ணாநகர் - 39
தேனாம்பேட்டை - 8
கோடம்பாக்கம் - 13
வளசரவாக்கம் - 10
அடையாறு -10
சோளிங்கநல்லூர் - 4

இந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 14 நாட்கள் தொடர்ந்து நோய்த்தொற்று இல்லையென்றால் கட்டுப்படுத்தப்பட்டு பகுதியில் இருந்து விடுவிக்கப்படும்.


ABOUT THE AUTHOR

...view details