தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பதிவுகள்: யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டருக்கு தடைகோரி மனு தாக்கல் - சமூக வலைதளம்

சென்னை: மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Jul 21, 2020, 5:04 PM IST

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்த விமர்சனங்கள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்தச் சேனலை நிர்வகித்துவந்த சுரேந்தர், செந்தில்வாசன் உள்ளிட்டோர் மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கந்தசஷ்டி கவசத்தைக் கொச்சைப்படுத்தி பதிவு வெளியிட்ட விவகாரத்தில், யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் மீதும், கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ”கரோனா பேரிடரால் ஏற்கனவே உலகமே தத்தளித்துவரும் சூழலில், தற்போது சமூக வலைதளங்களில் வெறுப்பு பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அரசியல் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் தொடங்கி கடவுள்கள் வரை அவமதிக்கப்படுகிறார்கள்.

மேலும், மாரிதாஸ், கிஷோர் கே. ஸ்வாமி, சவுக்கு சங்கர் போன்ற நபர்கள் தங்களுடைய பேச்சுகள், கட்டுரைகளால் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்துவருகின்றனர். வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்கள் அடங்கிய செய்திகளைச் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என விதிகள் வகுத்துள்ள போதும், இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து இடப்படுகின்றன. அவற்றை நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.

2018ஆம் ஆண்டு சமூக வலைதளங்களைக் கண்காணிக்க மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளது. அந்த விதிகளைப் பின்பற்றியிருந்தால், இதுபோன்ற சட்டவிரோத நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருக்கும். கந்தசஷ்டி கவசம் தொடங்கி மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இதுபோன்ற பதிவுகளை வெளியிட யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் பாரம்பரியக் கலைகள் அழிந்துவிடும்' - நீதிமன்றம் வேதனை

ABOUT THE AUTHOR

...view details