தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

' வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி வழக்கு': புதிய தமிழகம் கட்சி - Chennai High Court

சென்னை: மே 2ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக்கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Apr 28, 2021, 5:27 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், 'தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் பண பலத்தைத் தடுக்க இரு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் என தேர்தல் அறிவிப்பின்போது, தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். இருந்தபோதும் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகளின் சார்பில் பணப்பட்டுவாடா நடந்தது.

பல தொகுதிகளில் நடந்த பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் அலுவலர்களிடம் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தமிழ்நாட்டில் மட்டும் 430 கோடி ரூபாயை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்

பணப்பட்டுவாடா தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரி அளித்த புகாரை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.' என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில், விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details