தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாக பரவி, குறிப்பாக சென்னையில் அதன் தீவிரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவில் 509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பரவலைக் கட்டுப்படுத்த மூன்றாம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மே 17 வரை அமலில் இருக்கும் நிலையில், நிபந்தனைகளுடன் தேநீர் கடை, வண்டி பழுது பார்க்கும் கடைகள் போன்ற 34 கடைகளைத் திறக்கலாம் என அரசு அறிவித்தது. கடைகளில் அடிக்கடி கிருமிநாசினி தெளிப்பது, பொருட்களை வாங்கும்போது மக்கள் தனி நபர் இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை கடை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எப்போதும் பரபரப்பாகவும், கூட்டம் அதிகமாகவும் காணப்படும் பாலவாக்கம் பெரியார் வீதியில், ஊரடங்கால் கடந்த நாட்களாக மக்கள் கூட்டம் சற்று குறைந்திருந்தது. இந்நிலையில், கடைகளைத் திறக்கலாம் என்ற அறிவிப்பு வந்தவுடன், இங்குள்ள பல கடைகள் இன்று திறக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் அப்பகுதியில் இன்று அதிகரித்தது.