தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்த குடியரசுத்தலைவர் - undefined

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருணாநிதியின் உருவப்படத்தை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆகஸ்ட் 02) திறந்து வைத்தார்.

ச்
s

By

Published : Aug 2, 2021, 7:03 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆகஸ்ட் 02) சென்னை வருகை தந்தார்.

அப்போது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

இதையடுத்து தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா தொடங்கியது.

இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு வரவேற்புரை வழங்கினார். இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசினர்.

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்.

பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

தமிழில் வணக்கம் என்று உரையைத் தொடங்கிய குடியரசுத்தலைவர்

குடியரசுத் தலைவர் 'வணக்கம்' என்று தனது உரையைத் தொடங்கினார்; சிறிது நேரம் தமிழில் சில வரிகளைப் பேசினார்.

அதில், 'தேவதாசி ஒழிப்புச் சட்டம், மதிய உணவுத் திட்டம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்களை இயற்றியதன் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவை நாட்டின் நீரூற்றாக உள்ளது.

தமிழ் இலக்கியத்தில் கலைஞர் கருணாநிதிக்கு பரந்த ஞானம் இருந்தது. தமிழை செம்மொழியாக அங்கீகரிக்க அவர்தான் காரணம்.

சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், கருணாநிதி தனது இளம்வயதிலேயே பொது வாழ்க்கையைத் தொடங்கினார். தனது நீண்டகால பொது சேவைக்குப் பிறகு உலகை விட்டுப் பிரிந்தார். பெரிய தலைவரின் உருவப்படங்களுடன் சட்டப்பேரவையில் சிறந்த தலைவரின் உருவப்படத்தை திறப்பதே பொருத்தமான அஞ்சலி.

திருவள்ளுவர், காந்தி, ராஜாஜி, காமராஜ், ஈ.வே.ராமசாமி, அண்ணாதுரை அந்த வரிசையில் கலைஞர் கருணாநிதி' என்றார்.

இதையும் படிங்க: திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details