மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல் கோவை தடாகம் பகுதியில், யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள 200 செங்கல் சூளைகளை மூடக்கோரி, சின்ன தடாகத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும், யானைகள் நல ஆர்வலரான முரளிதரனும் வழக்கு தொடர்ந்திருந்தனர். செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், நில வளத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
யானை வழித்தடத்தில் செங்கல் சூளை! - உடனே அகற்ற உத்தரவு! - யானை வழித்தடத்தில் செங்கல் சூளை
17:03 February 10
சென்னை: யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை தாமதமின்றி உடனே அகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கனிம வளத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகரன், வனத்துறையுடன் கலந்தாலோசித்து விதிமீறல் செங்கல் சூளைகளை கண்டறிய இருப்பதாகவும், அதுகுறித்து விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.
அதனை பதிவு செய்த நீதிபதிகள், அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர பிற இடங்களில் சட்ட விரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர். அதேபோல யானைகள் வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்கல் சூளைகளை தாமதமின்றி அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, ஒருங்கிணைந்த பதில் மனுவை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:பழைய இரும்பு மார்க்கெட்டில் தீ விபத்து