தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் தலைமையில், 'அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்' நடைபெற்றது. இக்கூட்டத்தில் 13 கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மக்களின் உயிர் காக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை தீவிரப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் தீர்மானம் போட்டு, அனைத்து கட்சிகளும் அதனை ஏற்று கொண்டுள்ளனர்.