தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மழையின் போது மட்டுமல்ல, மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்ய வேண்டும்- கமல்ஹாசன் - கனமழை பாதிப்புகள்

மழை வெள்ள பாதிப்பின் போது மட்டும் மக்களுக்கு உதவாமல் தொடர்ந்து மக்களுக்கான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்

By

Published : Nov 13, 2021, 8:08 AM IST

சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட தரமணி, வேளச்சேரி, தியாகராய நகர் பகுதிகளை கமல்ஹாசன் பார்வையிட்டார். அப்போது அப்பகுதி மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணங்களை அவர் வழங்கினார். தரமணியிலிருந்து வேளச்சேரி சாஸ்திரி நகர் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள வேளச்சேரி ஏரியையும் அவர் பார்வையிட்டார்.

திருப்தி இல்லை

அப்போது செய்தியாளர்களிடம், பேசிய கமல்ஹாசன், 'தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்றார். மழைக் காலங்களில் மட்டுமே வடிகால் கட்டமைப்புகள் குறித்து பேசிவிட்டு பிறகு மறந்துவிடாது என்றும், அதற்குத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.


மேலும், மழை வெள்ள பாதிப்பின் போது மட்டும் மக்களுக்கு உதவாமல் தொடர்ந்து மக்களுக்கான உதவிகளை அரசு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியா 75 - காலனியாதிக்கத்திற்கு எதிராக வெகுண்டெழுந்த சிற்றரசி!

ABOUT THE AUTHOR

...view details