தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 1, 2022, 5:34 PM IST

ETV Bharat / city

'எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: விசாரிக்கத் தடை விதிக்க முடியாது' - உயர் நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெண்டர் வழக்கில் தடை விதிக்க மறுப்பு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெண்டர் வழக்கில் தடை விதிக்க மறுப்பு

சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.

அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை, எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. இதேபோல் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்த வழக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்திருந்தனர். இந்த இரண்டு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும்; வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள், விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு செய்ய தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது வேலுமணி சார்பில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகி, மாநகராட்சி டெண்டர்கள் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்து பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அறப்போர் இயக்கத்துக்கு உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மனுஸ்மிருதி சட்டமாகும் - தொல் திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details