தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பணப்பட்டுவாடா புகாரால் தொகுதிகளில் மறு தேர்தலா? - சத்யபிரதா சாஹூ பதில்

சென்னை: அதிக பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பகுதிகளில் புகார் பெறப்பட்ட வேட்பாளர்கள் தகுதி நீக்கம் குறித்து, தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

ceo
ceo

By

Published : Apr 5, 2021, 3:43 PM IST

தலைமைச் செயலகத்தில் இன்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாளை காலை 7 மணிக்கு தொடங்கவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்குச்சாவடி மையப் பணியாளர்கள், வாக்காளர்கள் ஆகியோருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாநிலத்தில் மொத்தமாக 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். 88 ஆயிரத்து 957 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 1,29,165 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் பணிகளில் 4 லட்சத்து 75 ஆயிரத்து 521 ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பணப்பட்டுவாடா புகாரால் தொகுதிகளில் மறு தேர்தலா? - சத்யபிரதா சாகு பதில்

50% வாக்குப்பதிவு மைய நிகழ்வுகளை சிசிடிவி மூலம் இணையதளத்தில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, உரிய ஆவணங்களின்றி பணம், தங்கம், மது உள்ளிட்ட 428 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பிலானவை, பறக்கும் படை சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளன. பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி முறையில் வாக்களிக்கக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பணப்பட்டுவாடா புகார் எழுந்த தொகுதிகளில் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவது, தேர்தலை ஒத்தி வைப்பது உள்ளிட்டவை குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுக புகார் மனு

ABOUT THE AUTHOR

...view details