தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 19, 2022, 12:36 PM IST

Updated : Jul 19, 2022, 1:01 PM IST

ETV Bharat / city

எதிர்க்கட்சி துணைத் தலைவர் R.B.உதயகுமார்- இபிஎஸ் அறிவிப்பு

சென்னையில் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் R.B.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எதிர்கட்சி துணைத் தலைவர்  R.B.உதயகுமார்- இபிஎஸ் அறிவிப்பு
எதிர்கட்சி துணைத் தலைவர் R.B.உதயகுமார்- இபிஎஸ் அறிவிப்பு

சென்னை:வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வானார். அதனைத்தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரை கட்சியை விட்டு நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

உடனடியாக எடப்பாடி பழனிசாமி உட்பட பலரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று அதிமுக கட்சியின் கொறடா எஸ்.பி.வேலுமணி, எதிர்கட்சித் துணைத் தலைவர் தொடர்பாக கடித்ததை சபாநாயகர் அப்பாவிடம் வழங்கினார்.

ஓ. பன்னீர்செல்வம் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் 3 பேரும் அதிமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் R.B.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் துணைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்படுத்திய திமுக அரசு - ஈபிஎஸ் கண்டனம்

Last Updated : Jul 19, 2022, 1:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details