தமிழ்நாட்டில் கரோனா தடுப்புக் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். வருமானமின்றி மக்கள் இருக்கும் நிலையில், அவர்களின் தேவைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதேபோன்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், 1000 ரூபாய் ரொக்கம் கொடுக்கப்படுமெனவும் அறிவித்திருந்தார்.
அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்கமும், ஏப்ரல் மாதத்திற்கான இலவச நியாய விலைக்கடை பொருட்களும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, மே மாதத்திற்கான விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவை அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இன்று முதல் வழங்கப்படுகிறது.