சென்னை:தீபாவளி பண்டிகைக்கு முன்பு நியாயவிலைக்கடை கடைகளில் பொருள்களைப் பெற முடியாதவர்கள் நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், மாதத்தின் முதல் 3 நாள்கள் தங்கு தடையின்றி பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், அதே போல் கூடுதல் நேரம் கடைகள் இயங்கவும் ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளிக்கு முன்பு அத்தியாவசிய பொருள்களை வழங்குவதை நாளிதழ்கள் செய்தியாக விளம்பரப்படுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கக் காவலர்கள் பணியமர்த்தி ஒழுங்குப்படுத்தி பொதுமக்களுக்குப் பொருள்கள் வழங்க வேண்டும்.