சென்னை: 2022-23ஆம் ஆண்டிற்கான இளங்கலை பிஇ, பிடெக் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார். இதில் கேரளாவில் பள்ளிப்படிப்பை முடித்த தமிழ்நாட்டை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மளையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சிதா. இவரின் குடும்பம் விவசாயத்தை பூர்வீகமாகக் கொண்டது. தொழில் செய்வதற்காக கேரளா மாநிலம் கொல்லத்தில் வசித்து வந்துள்ளனர்.ரஞ்சிதா அங்கேயே பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து முடித்து 1119 மதிப்பெண் பெற்றுள்ளார்.
பொறியியல் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்த ரஞ்சிதா இதுகுறித்து ரஞ்சிதா கூறியதாவது, "பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை, லட்சக்கணக்கான பேரில் முதலிடத்தை பிடித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
சென்னையில் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அண்ணா பல்கலைக்கழகத்தில் சி.எஸ்.இ படிப்பில் சேர விரும்புகிறேன். படிப்பை முடித்த பிறகு ஐடி துறையில் புதிய சாப்ட்வேர்களை கண்டுபிடித்து சாதிக்க வேண்டும் என கூறினார். அனைவரும் முயற்சி எடுத்து கடுமையாக உழைத்தால் நினைக்கும் இடத்தை அடைய முடியும் என்று அவர் கூறினார்.
பொறியியல் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்த ரஞ்சிதா இந்தாண்டு இளங்கலை பொறியியல் படிப்பில் பிஇ, பிடெக் படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலில் 133 மாணவர்கள் 200-க்கு 200 கட்-ஆப் பெற்றுள்ளனர். கடந்தாண்டில் 13 மாணவர்கள் மட்டுமே 200க்கு 200 கட் ஆப் பெற்ற நிலையில் இம்முறை 133 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொறியியல் தரவரிசையில் 133 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப்