இஸ்லாமிய மக்களின் முக்கிய திருநாளான ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். ஈகை திருநாளாக கடைப்பிடிக்கப்படும் இந்த பண்டிகைக்கு ஒருமாத காலத்திற்கு முன்பாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ரம்ஜான் மாதத்தில் பிறை தோன்றும் நாளில் இந்தப் பண்டிகையை மக்கள் கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான முதல் பிறை தென்பட்டதையடுத்து ரம்ஜான் பண்டிகை ஜூன் 5ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி டெல்லி, மும்பை, ஹைதராபாத், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.