தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கடன் வாங்க வலியுறுத்தும் பள்ளிகள் - ராமதாஸ் கடும் கண்டனம் - தனியார் பள்ளிகள்

சென்னை: கந்து வட்டிக்கு கடன் வாங்க வலியுறுத்தும் பள்ளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ramadoss
ramadoss

By

Published : Jun 4, 2020, 5:21 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் ஊரடங்கு நீக்கப்படும் வரை கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளை அரசு எச்சரித்தும், கட்டண வசூலிப்பிற்கான நவீன உத்தியாக, நிதி நிறுவனங்களிடம் பணத்தை மொத்தமாக பெற்றுக்கொள்ளும் பள்ளிகள், அதை வட்டியுடன் சேர்த்து தவணைகளில் நிதி நிறுவனங்களிடம் செலுத்தும்படி பெற்றோரைக் கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

மும்பையை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த, அதிக கட்டணம் வசூலிக்க கூடிய பிரபல பள்ளிகள் கூட்டு வைத்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. இத்திட்டத்தின்படி ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் படிப்பதாகவும், ஒவ்வொரு மாணவனும் செலுத்த வேண்டிய சராசரி கட்டணம் 50,000 ரூபாய் என்றும் வைத்துக் கொண்டால், அந்த பள்ளிக்கு ஓராண்டு முழுவதும் செலுத்த வேண்டிய கட்டணத் தொகையான 5 கோடி ரூபாயை தனியார் நிதி நிறுவனம் மொத்தமாக செலுத்தி விடும். அந்தத் தொகையை 12 மாதத் தவணைகளில் பெற்றோரிடமிருந்து தனியார் நிதி நிறுவனம் வசூலித்துக் கொள்ளும். இத்திட்டத்தில் இணையும்படி பெற்றோரை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

எனவே, அரசின் உத்தரவை மீறி கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதுடன், அதற்காக கந்து வட்டிக்கு கடன் வாங்கவும் வலியுறுத்தும் பள்ளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மின்கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் : டி.டி.வி. தினகரன்

ABOUT THE AUTHOR

...view details