சென்னை:ரமலான் பண்டிகை கொண்டாடுவதற்கு, ரமலான் மாத இறுதியில் பிறை நிலா தென்பட வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. அதன்படி இன்று தமிழ்நாட்டில் சென்னை உள்பட இதர மாவட்டங்களிலும் பிறை காணப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாஹூத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளார்.
மேலும், நாளை மறுநாளான வரும் வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.