தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கணவர் முருகனுக்கு பரோல் கோரி நளினி மனு -  சிறைத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - தமிழ்நாடு சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு

மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாள்கள் பரோல் வழங்கக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

rajiv-gandhi
rajiv-gandhi

By

Published : Jun 2, 2022, 11:02 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் கைதியாக உள்ள நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,, "ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருக்கிறேன். அதேநேரம் வேலூர் சிறையில் இருக்கும் எனது கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை.

31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும், இன்னும் நாங்கள் விடுதலை செய்யப்படவில்லை. மருத்துவ காரணங்களுக்காக எனது கணவர் முருகனை 6 நாள்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி, மே 26ஆம் தேதி நானும், மே 21ஆம் தேதி எனது தாய் பத்மாவும் அரசிடம் மனு அளித்தோம். அவை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

அதனால் எனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் முகமது சபீக் அமர்வு, ஜூன் 13ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக சிறைத்துறை உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டத்திற்கு விண்ணப்பம்

ABOUT THE AUTHOR

...view details