சென்னை:தமிழ் சினிமாவில் கோலமாவு கோகில படம் மூலம் இயக்குநர் நெல்சன் அறிமுகமானார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து, வாசூலில் மாபெரும் சாதனை படைத்தது.
அடுத்தடுத்த வெற்றியின் மூலம் நெல்சனுக்கு விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், விஜய்-நெல்சன் கூட்டணியில் சன்பிக்சர்ஸ் தாயாரிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் உருவாகிவருகிறது. இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனிடையே நெல்சன்-ரஜினிகாந்த் கூட்டணியில் புதிய படம் ஒப்பந்தமாக உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் இன்று(பிப்.10) சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், நெல்சன்-ரஜினிகாந்த் கூட்டணியில் தலைவர் 169 உருவாகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதேபோல நெல்சன், அனிருத் இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
அண்ணாத்த படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், நெல்சன் திலீப்குமாருக்கு ரஜினிகாந்த் வாய்ப்பு கொடுத்துள்ளார். பீஸ்ட் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால், அதற்கு பிறகு படபிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க:'சிவகார்த்திகேயன் 20' படப்பிடிப்பு காரைக்குடியில் தொடக்கம்