நடிகர் ரஜினிகாந்த்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து சிங்கப்பூர் சென்ற அவர், அங்குள்ள மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்
தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்கா சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருவதை ரஜினிகாந்த் வழக்கமாக வைத்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தாமதமாக கடந்த ஜூன் 19ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினி.
சென்னையில் இருந்து மத்திய அரசின் அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார். அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் சென்றார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை சென்னை திரும்ப உள்ளார்.
சென்னை திரும்பியவுடன் சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு அண்ணாத்த டப்பிங் பணிகளில் கலந்துகொள்வார் என தெரிகிறது.
இதையும் படிங்க : மேற்கு விர்ஜினியாவில் சூப்பர் ஸ்டார் - வைரலாகும் புகைப்படங்கள்!