சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
’வடமேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தென் மேற்கு பருவக்காற்று வழுவடைந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் தென் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மலை பகுதிகளில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.