ரயில் நிலையங்களில் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் உள்ளிட்டோரின் துப்பாக்கி தாக்குதலை சமாளிக்க, பெரும்பாலும் மணல் மூட்டைகளையே ரயில்வே போலீசார் பயன்படுத்துகின்றனர். மணல் மூட்டைகளை அடுக்கி, அதற்கு பின் மறைந்திருந்து துப்பாக்கி தாக்குதலை சமாளிக்கும்போது, போலீசார் மீது குண்டு துளைக்க வாய்ப்புள்ளது. அந்த வேளையில் பொதுமக்களை காக்க முடியாத நிலையும் ஏற்படலாம்.
இதற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், மோச்சா என்னும் பெயரில் பாதுகாப்பு கேடயங்களை உருவாக்கியுள்ளனர். இந்த மோச்சா பாதுகாப்பு கேடயத்தின் ஒத்திகை நிகழ்ச்சி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று (ஏப்.7) நடத்தப்பட்டது. சுமார் 5 அடி உயரம் கொண்ட மணல் நிரப்பப்பட்ட பிளைவுட் பலகையால் தயாரிக்கப்பட்ட இந்த கேடயம் தயாரிக்கப்பட்டுள்ளது.